மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள்-

258

 

பலாங்கொடை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெட்டிகல தோட்டத்தில், மண்சரிவு அபாயத்திற்குட்பட்ட இருபத்தாறு (26)குடும்பங்களுக்கு ஆவண செய்வதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள் அவர்கள் தெரிவித்துள்ளார்.

11c9eec1-d110-491e-a532-e5cd2f398c70 a6e0d997-b701-4d44-b835-41d534887af5 c23403b2-899d-4879-9209-5188ffbca2e9

குறித்த பெட்டிகல தோட்டத்தில், தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் அமைந்துள்ள தோட்டக்குடியிருப்புக்கள், தோட்ட நிர்வாகிகளின் குடியிருப்புக்கள், கூட்டுறவு நிலையம் மற்றும் சிறுவர் பராமரிப்பு நிலையம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு மண்சரிவு அபாயநிலை காணப்படுவதாக தேசிய கட்டிட ஆய்வு மையத்தினால் 2015.01.05 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட களப்பரிசொதனையின் மூலம் பெறப்பட்ட ஆய்வறிக்கையில் விசேடமாக குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, கடந்த ஒருவார காலமாக இப்பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக மேலும் சில தோட்டக்குடியிருப்புக்கள், கட்டிடங்கள் வெடிப்புக்குள்ளானதனையடுத்து, இப்பிரதேசத்தில் வாழும் 26குடும்பங்களைச் சேர்ந்த 124 எண்ணிக்கையான தோட்ட மக்கள் இது தொடர்பில், பலாங்கொடை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கமைய, இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினூடாக தோட்ட மருத்துவமனைக்கு அருகாமையில் தற்காலிக கூடாரங்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, இவ்விடயம் தொடர்பாக தகவலறிந்த மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள் அவர்கள் நேரடியாகச்சென்று பாதிப்புக்குள்ளான தோட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதோடு, இவ்விடயம் தொடர்பாக கல்வி இராஜாங்க அமைச்சரும், மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி பதில் அமைச்சருமான கௌரவ இராதாகிருஷ்ணன் அவர்களையும், தொழிலாளர் தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.திலகராஜ் அவர்களையும் தொடர்புகொண்டு தெரியப்படுத்தியதோடு, வெகுவிரைவில் தகுந்த நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மலையக மக்கள் முன்னணியின் உபதலைவர் ரூபன் பெருமாள் அவர்கள் அனர்த்தத்திற்குள்ளான மக்களுடன் உரையாற்றும்போது மேலும் தெரிவித்தார்.

SHARE