மலையத்தில் ஏற்பட்ட காலநிலை மாற்றம்

170

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடை மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்றும், லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் மூன்றும் திக்கப்பட்டுள்ளன. விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறக்கப்பட்டுள்ள நிலையில் காசல்ட்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக புவியியல் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டை சுற்றியுள்ள கடல் பிரதேசங்களில் வீசும் காற்று மற்றும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் இடைக்கிடையே 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE