மலையாளத்தில் தயாராகும் விஜய் ரசிகர்களை பற்றிய படம்- பிரபல இயக்குனர் பாராட்டு

224

மூன்று ரசிகர்கள் என்ற பெயரில் விஜய் ரசிகர்களால் ஒரு படம் உருவாக்கப்பட்டு வருகிறது தமிழில். அதேபோல் மலையாளத்தில் போக்கிரி சீமான் என்ற பெயரில் ஜிஜோ ஆண்டனி ஒரு படம் இயக்கியிருக்கிறார்.

கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர்களை பற்றியும், தங்கள் நாயகனுக்காக அவர்கள் செய்யும் விஷயங்களை பற்றிய கதையாம்.

படம் வரும் செப்டம்பர் 22ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கிருஷ்ணன் சேதுகுமார் விஜய்யின் அப்பா SA சந்திரசேகர் அவர்களை அண்மையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.

சன்னி வெயின், பிரயகா மார்டின் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

SHARE