மலைப்பகுதியின் மேலே சிக்கிய நபரை மீட்க வந்த ஹெலிகொப்டர் மலையில் மோதி வெடித்து சிதறிய வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
ஆஸ்திரியாவில் மிகப்பெரிய Grossglockner மலை அமைந்துள்ளது, இந்த மலைப்பகுதியின் மீது ஏறிய நபர் ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவசர உதவி எண்ணை குறித்த நபர் தொடர்பு கொள்ளவே, மீட்புக்குழுவினர் ஹெலிகொப்டரில் விரைந்துள்ளனர்.
அதில் விமானி, ஒரு மருத்துவர், மீட்பு குழு நபர் என மொத்தம் மூன்று பேர் இருந்துள்ளனர்.
மலைப்பகுதியில் ஹெலிகொப்டர் தரையிரங்கிய போது விமானியின் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்ததால் விமானித்தில் இருந்தவர்கள் கீழே குதித்து ஓடியுள்ளனர்.
முழுவதுமாக கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகொப்டர் மலையில் மோதி வெடித்து சிதறியுள்ளது, யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை, மருத்துவருக்கு மட்டும் சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது.
ஹெலிகொப்டர் மலையில் மோதுவதை அந்த பகுதியில் இருந்த நபர் வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.