பிரான்சில் சிறிய ரக விமானம் ஒன்று மலையில் மோதி வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mercantour massif மலை பகுதியிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் உள்ள ஆல்ப்ஸ்-மேரிடைம்ஸ் துறையில் விமானம் பறப்பதற்கான அடிப்படை வசதி இல்லாததே விபத்து ஏற்பட காரணம் என கூறப்படுகிறது.
விமானம் விபத்துக்குள்ளான தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் உதவியுடன் சம்பவயிடத்திற்கு உடனே விரைந்துள்ளனர். விமானி உட்பட இருவரின் உடலை மீட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட 64 வயதான பெண் ஜேர்மனி நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும், விபத்திற்கான காரணம் குறித்த நைஸ் விமான போக்குவரத்து துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.