தாய்லாந்து நாட்டின் இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 5 இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மியான்மர் எல்லைப் பகுதி அருகே வெள்ள மீட்பு பணிகளை முடித்துக்கொண்டு தாய்லாந்து நாட்டின் UH-72 ரக இராணுவ ஹெலிகொப்டர் பிசனுலோக் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது தாய்லாந்தின் மிகப் பெரிய மலைப்பகுதியான chiang mai பகுதியில் ஹெலிகொப்டர் மாயமானது. இதனையடுத்து மாயமான ஹெலிகொப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் விபத்துக்குள்ளான அந்த ஹெலிகொப்டர் chiang mai மலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதில் பயணம் செய்த 5 இராணுவ வீரர்கள் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அடந்த அந்த காடுகளில் பனி அதிகமாக காணப்படுவதால் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.