பதுளை, நமுனுகுல மலையேற்றத்துக்காக நண்பர்களுடன் வந்திருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் வைத்தியபீட மாணவர் ஒருவர் ஸ்பிரிங்வெலி பெல்ட் பூல் வாவியில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
21 வயதான இந்த மாணவர் தனது நண்பர்கள் சிலருடன் நமுனுகுல மலையில் நேற்று ஏறிக்கொண்டிருந்தபோது இந்த வாவியில் நீராடச் சென்ற சமயம் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார்.
இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.