மலை ஏரியில் வெற்று உடம்புடன் மீன்பிடித்த ரஷ்யா ஜனாதிபதி

178

சைபீரியாவின் கடும் குளிர் நிறைந்த மலை ஏரியில் வெற்று உடம்புடன் ரஷ்ய ஜனாதிபதி புடின் மீன்பிடித்து விளையாடும் காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

64 வயதான ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பல்வேறு அரசியல் சிக்கல்களுக்கு மத்தியில் சைபீரியாவின் தெற்குப் பகுதியில் உள்ள டிவா என்ற இடத்திற்கு விடுமுறையைக் கழிக்கச் சென்றுள்ளார்.

கடந்த ஒன்றாம் தேதி முதல் 3ம் தேதி வரை கடும் குளிர் நிறைந்த மலை ஏரியில் மீன்பிடித்தல், நீச்சலடித்தல் என்று பொழுதைக் கழித்துள்ளார்.

புடினுடன், அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி சோய்கு மற்றும் அதிகாரிகள் உடன் சென்றதாக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை ரஷ்ய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

SHARE