மல்லாகம் மகா வித்தியாலயம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

115

 

யாழ்ப்பாணம் மல்லாகம் மகா வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது இன்று (14.12.2023) மல்லாகம் மகா வித்தியாலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது.

கொக்குவிலில் உள்ள மல்லாகம் மகா வித்தியாலய அதிபரின் வீட்டில் கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி நுழைந்த இனந்தெரியாத நபர்களால் நடாத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலுக்கு நீதி கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தாக்குதல் சம்பவம்
அதிபர் மீதான தாக்குதலுக்கு நீதி கோரியும் இனிமேல் இவ்வாறான தாக்குதல் சம்பவம் நடைபெறக்கூடாது என்றும் மாணவர்கள் சுமூகமாக கல்வி கற்பதற்கான சூழலை உருவாக்க கோரியும் போராட்டகாரர்களால் வலியுறுத்தப்பட்டது.

போராட்டத்தின் முடிவில் தெல்லிப்பழை கோட்டக்கல்வி அலுவலகத்திற்கு போராட்டகாரர்களால் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.

SHARE