மல்வானை காணி தொடர்பில் பசில் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் அழைப்பு

230

1386473918basil_r_b

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர பசில் ராஜபக்சவுக்கு சொந்தமானதென கூறப்படும் மல்வானை காணி தொடர்பில் உரிமை கூற முடியாதென்றால், அதன் விற்பனை பணத்தை வழக்கிற்கு எடுக்குமாறு அரசாங்கத்தின் சொலிசிட்டர் ஜெனரல் துசித் முதலிகே கூறியிருந்தார்.

இன்று அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பூகொடை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மல்வானை கஹபட வீதியில் 16 ஏக்கர் காணி ஒன்றை கொள்வனவு செய்து வீடு ஒன்று நிர்மாணித்து அரசாங்க பணத்தை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக பூகொடை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது பசில் ராஜபக்சவின் சட்டதரணி சஞ்ஜய ரணதுங்க அதற்கு எதிர்ப்பு வெளியிட்டதோடு காணி தொடர்பில் உத்தரவிடுவதென்றால் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றில் ஆஜராகியிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய பசில் ராஜபக்சவை எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பூகொட நீதவான் டீ.ஏ.ருவன்பத்திரன உத்தரவிட்டுள்ளார்.

SHARE