வளி மண்டலத்தில் மழை பெய்யக்கூடிய மாற்றங்கள் இன்னும் ஏற்படவில்லை என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலையை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய அளவிற்கான மழை பெய்யும் சாத்தியங்கள் இதுவரையில் வளிமண்டலத்தில் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது.
வரட்சியுடன் கூடிய காநிலை மாத இறுதியில் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் காலநிலை ஆய்வாளர் சாமில் பிரேமதிலக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும் ஏனைய ஆண்டுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டு அதிகளவு பருவப்பெயர்ச்சி மழை பெய்யாது என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும 14ம் 15ம் திகதிகளில் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு மழை பெய்தாலும் பின்னர் மீளவும் வரட்சியான காலநிலை நீடிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த மழை காரணமாக நாட்டின் சுமார் 625,000 பேர் நீர்ப்பற்றாக்குறையை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலனறுவை, குருணாகல், அனுராதபுரம், புத்தளம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, இரத்தினபுரி, கேகாலை, மொனராகல், மாத்தளை, கண்டி, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, அம்பாந்தோட்டை, காலி போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நீர்ப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர்.