தொடர்ந்து பெய்து வரும் மழை கால நிலையில் நீர்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் நீர் வீழ்ச்சிகளிலும் நீர்அதிகரித்து கானப்படுகின்றது.
பெய்த அடை மழையில் சென்கிளேயர் மற்றும் டெவன் நீர்வீழ்ச்சீயிலும் நீர் அதிகரித்துள்ளது காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் காசல்ரீயில் நாற்பது அடியிலிருந்து ஐம்பது அடியாகவும் மவுசாகலையில் முப்பது அடியிலிருந்து நாற்பது அடியாகவும் பத்து அடி வரை நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர் மேலும் 17.05.2016 மழை வீழ்ச்சி குறைந்துள்ள நிலையில் மேல்கொத்லை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவு மாத்திரம் திறந்துவிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மு.ராமசந்திரன் நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
