நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்
மலையகத்திலிருந்து கதிர்காமத்திற்கான பாத யாத்திரையை முருகன் பக்தர்கள் ஆரம்பித்துள்ளனர்.



எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகவுள்ள கதிர்காம கொடியேற்ற பெருவிழாவில் கலந்துகொள்ளும் வகையில் 01.07.2018 மாலை மஸ்கெலியா நல்லத்தண்ணி மரே பகுதியை சேர்ந்த 150 பக்தர்கள் பாத யாத்திரையை ஆரம்பித்துள்ளதுடன், இதில் 40 பெண் பக்தர்களும் கலந்துகொண்டனர்.
ஜூலை மாதம் 13 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும் ஆடிப்பெருவிழாவில் கலந்துகொள்ள பாத யாத்திரையை ஆரம்பித்துள்ள இரண்டாவது யாத்திரை குழுவினர் 02.07.2017 அட்டன் நகரை வந்தடைந்தனர். தொடர்ந்து வெளிமடை, பண்டாரவளை, எல்ல வழியாக கதிர்காமத்தை சென்றடையவுள்ளனர்.