மஸ்கெலியாவில் குடியிருப்பின் மீது மண்சரிவு

138
நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன்

தொடந்து பெய்து மழையினால் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாமஸ்கெலியா பகுதியில் குடியிருப்பொன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளமையினால் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பகுதியிலுள்ள 6 குடியிருப்பாளர்களை வெளியோருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
15.08.2018 காலை 4 மணியளவில் கடும் மழை பெய்த நிலையில் வீட்டின் சமையலறை பக்கம் கேட்பதை உணர்ந்த வீட்டின் உரிமையாளர் வீட்டின் பின்புறம் வெளியே வந்து பார்த்த நிலையில் மண் சரிவில் சிக்குண்டு காயமடைந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் காயமுற்றவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்  அனர்த்தம் ஏற்படும் அச்சம் காணப்படுவதனால் குறித்த குடியிருப்பை அண்டிய 6 குடியிருப்பாளர்களை தற்காலிகமாக வெளியேருமாறு குடா மஸ்கெலிய கிராம உத்தியோகஸ்தரினால்  அறிவித்தல் விடுத்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
SHARE