அட்டன் கல்வி வலயம் மஸ்கெலியா சென்ஜோசப் கல்லூரியின் வருடாந்த பாரதிவிழாவும், ஆய்வரங்கமும் எதிர்வரும் 20,21ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
கல்லூரியின் அதிபர் பீ.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 20ஆம் திகதி வியாழக்கிழமை புதிய பரிமாணமாக 2017 ம் ஆண்டு கா.பொ.த. உயர்தர கலைப்பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக போராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களின் பங்குபற்றலுடன் மலையகத்தின் சமகால இலக்கியம், சமூக அரசியல், பண்பாடு எனும் தொனிப்பொருளில் ஆய்வரங்கமும், கல்லூரியின் பிரதான மண்டபத்தில் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது. 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாரதி விழாவும் செவ்வொளி ஆய்வு நூல்வெளியீடும் இடம்பெறும். நிகழ்வில் கல்வித்திணைக்கள அதிகாரிகள், கல்விச்சமூகம் உட்பட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்