ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வைக் கோரியை தொழிலாளர் போராட்டம் 9ஆவது நாளாகவும் மஸ்கெலியா மற்றும் நல்லத்தண்ணிப் பகுதிகளில் 04.10.2016 அதாவது இன்றையதினமும் நடைபெற்றது.
முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டமானது மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கருகில் கருப்புக்கொடிகளை ஏந்தியவாரு மஸ்கெலியா பிரதேசத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதேவேளை நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவின் நோட்டன் மஸ்கெலியா வீPதியில் லக்ஷபான சந்தியிலும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் லக்கம் அப்புகஸ்தன போன்ற 8 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களே ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்துள்ள 730 ரூபாய் வேண்டாம், ஆயிரம் ருபாய் அதிகரிப்பே வேண்டும் எனக் கோசமிட்டனர். ஆர்ப்பாட்டத்தினால் மஸ்கெலியா நோட்டன் வீதிப் போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்