ஜனவரி 17
மஸ்கெலிய நிருபர்
மஸ்கெலிய நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் சிகரத்தில் உள்ள லெமன்மோரா என்ற தனியார் தோட்டம் 300 ஏக்கர் கொண்ட தோட்டம் ஆகும்.
இத்தோட்டம் தனியார் ஒருவருக்கு உரித்தானது. இத்தோட்டத்தில் மாதம் 30 நாள்களும் பணிபுரிந்தனர். அக்கால கட்டத்தில் ஆங்கிலேயர் இத்தோட்டத்தை நிர்வாகம் செய்தனர். அதன் பின்னர் மாரியாப்பிள்ளை என்பவர் ஆங்கிலேயரிடம் பெற்று அவர்கள் எவ்வாறு நடாத்தினார்களோ அதே போல் நடத்தி வந்தார். அவர் மறைவிற்கு பின்னர் அவரது மகன் சுந்தரலிங்கம் பொறுப்பேற்று நடத்தி வந்தார். அவரது காலகட்டத்தில் வங்கியிடம் கடன் பெற்று ஒரு தேயிலை தொழிற்சாலை அமைக்கும் பணி ஆரம்பமானது. இதன் போது வங்கி கடன் முறையாக கட்டப்படாததால் தோட்டம் மக்கள் வங்கியினால் 1995ம் ஆண்டு ஏலம் விடப்பட்டது. எவரும் வாங்கமுன்வராததால் வங்கியே தோட்டத்தை நடத்திவந்தது. சுமார் 18 மாதங்கள் நடத்திய தோட்டத்தை வங்கி தலைநகரிலிருந்த வெள்ளையம்மாள் என்பவருக்கு குத்தகைக்கு வழங்கியது. இக்காலகட்டங்களில் சுமார் 200 தொழிலாளர்கள் வேறு தோட்டங்களுக்கு பணிக்கு சென்றுவிட்டனர். தற்போது 100 மட்டுமே உள்ளனர்.
அத்தோட்டத்தை மீண்டும் வங்கியிடமிருந்து கொழும்பில் உள்ள அமல்சூரிய சொந்தமாக வாங்கிவிட்டார். அமல்சூரியவின் காலகட்டத்தில் 50 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்தி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாத வேதனத்தை ஜனவரி 17ம் திகதியே மஸ்கெலிய நகரிலில் வந்து பதாகைகள் ஏந்தி அகிம்சை வழியில் போராட்டம் மேற்கொண்டு பெற்றுகொண்டனர். இலங்கை தேசிய தோட்டதொழிலாளர் சங்கத்தின் மாநில பிரதிநிதி பி.பி.நாதன் மற்றும் மஸ்கெலிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, அட்டன் தொழில் ஆணையாளர் தொழிலாளர்களிற்கான வேதனத்தை பெற்றுகொடுத்தனர். ஜனவரி 1 முதல் இன்று வரை தோட்டமுகாமைத்துவம் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் பட்டினிசாவில் உள்ளனர்.
தோட்டத்தில் விவசாயம் செய்ய தோட்ட உரிமையாளர் இடம் வழங்குவதில்லை. அவருக்கு உரிமையான பூமியில் விவசாயம் செய்யகூடாது எனவும் ஆடு, மாடு என்ற வீட்டுபிராணிகள் வளர்க்ககூடாது எனவும் உத்தரவு இட்டுள்ளதாக தோட்டதொழிலாளர்கள் பின்வருமாறு கூறினர்.
பரசுராமன் நடராஜ் வயது 42:
1993ம் ஆண்டு முதல் இந்த தோட்டத்தில் பணிபுரிகின்றேன். மாரியாபிள்ளை சுந்தரலிங்கம் எம்மை பதிவு செய்தார். அப்போது இது அவரது சொந்த தோட்டமாக இருந்தது. 300 ஏக்கரில் 31 நாட்களும் வேலை செய்தோம். எமக்கும் கை நிறைய பணம் கிடைத்தது.
1995ம் ஆண்டு சுந்தரலிங்கம் வங்கியில் தோட்டத்தை அடகுவைத்து மீட்க முடியாமல் ஏலத்தில் போனது. அப்போது தோட்டத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. ஆகையால் தோட்டத்தை வங்கியே 18 மாதகாலம் நடத்தியது. அதன் பின் 1997ம் ஆண்டு அமல்சூரிய இத்தோட்டத்தை வாங்கியதாக கூறினார்.
முத்துகுமார் வயது 45 கடந்த 33 ஆண்டு காலமாக இங்கு பணிபுரிகிறேன். ஆனால் கடந்த காலங்களை விட தற்போது உள்ள நிர்வாகமே படுமோசமான நிலையில் உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு 12ம் மாத சம்பளம் எங்கள் உண்ணாவிரத போராட்டத்தின் பின் இலங்கை தேசிய தோட்டதொழிலாளர் சங்கத்தின் மூலம் பெற்றுகொடுக்கப்பட்டது. கடந்த 1ம் திகதி முதல் தோட்ட தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. நிர்வாகம் வேலை வழங்கவும் இல்லை. இதனால் எமது குடும்பங்கள் பட்டினியால் வாடுகின்றன. தனியார் தோட்டம் என்பதால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது உள்ளது என தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
1971ம் ஆண்டு மாரியாப்பிள்ளை சுந்தரலிங்கம் அவர்களிடம் பணிபுரிய வந்தேன். அன்று முதல் இன்று வரை இதே தோட்டத்தில் வாழ்ந்து வருகிறேன். 4 பிள்ளைகளின் தாய் 24 வருடங்கள் தோட்டத்தில் பணிபுரிந்தேன். தற்போது வயது 63. நான் வேலையை விட்டு விலகி எனது சேமலாப நிதியை பெற முயற்சி செய்தும் பலன் இல்லை. காரணம் தோட்ட முகாமையாளர் புண்ணியவர்தன் நிதியை பெற கையொப்பம் இடமறுக்கிறார். இவருக்கு 36 வயதில் பெண்ணும், 30 வயதில் ஆணும், 29 மற்றும் 28 நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன் தனது தங்கைக்கு குழந்தை கிடைத்து பணம் வழங்கப்பட வேண்டும். அது வழங்கப்படவில்லை. இதே போன்று பல பிள்ளைகளுக்கு 4 வயதாகியும் பணம் வழங்கப்படுததில்லை என கூறுகின்றார்.
வேல்ட் விஸன் நிறுவனம் சிறுவர் நிலையம் ஒன்றை அமைத்து கொடுத்தனர். 2 லைன்களுக்கு லயன்ஸ் கிளப் தகரம் 480 தகரங்கள் இட்டு கொடுத்தனர். தோட்டத்தில் பணி புரிந்து இறந்த இருவரின் நு.P.குஇ நு.வு.கு சேவைக்கால பணம் இன்னும் வழங்கப்படவில்லை. சிறுவர் பராமரிப்புக்காக கடந்த 5 ஆண்டு காலமாக சேவை ரூ.200 மட்டுமே வேதனம்.
பணிபுரிவோர் 50 பேர் உள்;ளனர்.
பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளது 23 பேருக்கு மட்டுமே.
பேர் பதிந்து தற்காலிகமாக பணிபுரிவோர் 10 பேர்.
ஏனையோருக்கு பதிவுகள் இல்லை.
மேலும் எ.p தேயிலை 50 ஏக்கர் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதாகவும் சுத்தம் செய்யும் பட்சத்தில் பலருக்கு வேலை வழங்கலாம் எனவும் பழனிவேல்(வயது 72) கூறினார்.
1991இலிருந்து முறையாக நு.P.கு பணம் போடப்படுவதில்லை என பதிவில் உள்ள தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பணி நிரந்தரம் செய்யப்பட்டவர்களுக்கு ரூ.450 மட்டுமே வேதனம் வழங்கப்படுகிறது. ஆனால் அன்றாட வேலைக்கு ரூ.425 வழங்கப்படுகிறது.
ஆர்.விஸ்வகுமார் 10 வருட காலமாக வேலை செய்தும் பதிவு இல்லை. தற்போது பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 2 குழந்தைகள்(8 வயது, 1½ வயது).;
தற்போதைய பிரச்சனைகளை தீர்க்க தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் முன்வருவார் என நம்புகிறோம் என தோட்டமக்கள் கூறுகின்றனர்.