ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக அளவில் சர்ச்சை ஏற்படுத்தியவர். அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என அப்போதே தகவல்கள் வந்தது. ஆனால் அது இன்னமும் உறுதி ஆகாமல் தான் உள்ளது.
இந்நிலையில் தற்போது மஹத்-ஐஸ்வர்யா ஜோடியாக நடிக்கும் ஒரு படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதில் மஹத் வடசென்னை வாலிபராகவும், ஐஸ்வர்யா பணக்கார வீட்டு பெண் போலவும் நடிக்கிறார்களாம்.