புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான திரிதள இராஜ கோபுர சகிதஜீர்ணோத் தாரண அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ ஆவர்த்தன பிரதிஷ்டா
மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி பெருவிழா
இந்து சமுத்திரத்தின் மத்தியில் மிளிரும் முத்தென திகழும் இலங்கை திருநாட்டின் மத்தியில் இயற்கை எழில் கொஞ்சும் கண்டி மாநகர் புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமிக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் நிகழும் சர்வ மங்களம் நிறைந்த மன்மத வருடம் பங்குனித்திங்கள் 4ம் நாள் (17.03.2016) வியாழக்கிழமை அதிகாலைப் பொழுது 5.50 மணிமுதல் 6.16 மணிவரையுள்ள சுபமுகூர்த்தத்தில் கிரியைகள் ஆரம்பமாகி தொடர்ந்து 7 நாட்கள் நடைபெற்று சர்வ மங்களமான மன்மத வருடம் பங்குனித்திங்கள் 10ம் நாள் (23.03.2016) புதன்;கிழமை அமிர்த சித்த யோகமும் பௌர்ணமி திதியும், உதிதர நட்சத்மிரமும் கூடிய காலை 9.17 மணிமுதல் 10.45 மணிவரையுள்ள இடப லக்ன சுப முகூர்த்தத்தில் எம்பெருமானுக்கு குடமுழுக்கு பெருவிழா நடைபெற குருவருளும், கைகூடியுள்ளமையால் அதற்குமுன், பின் நடைபெரும் கிரியைகளைத் தரிசித்து திருவருள் பெற வேண்டும் என பக்த அடியார்களை அழைக்கினறனர் புசல்லாவ ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தினர்
பங்குனித் திங்கள் 4ம் நாள் (17.03.2016) வியாழக்கிழமை
அதிகாலை 5.50 மணிக்கு விநாயகர் வழிபாடு, பிரதிஷ்டா சங்கல்ப்பம், புண்ணிய ஜபம் அனுக்ஞை, திரவிய சுத்தி, திரவிய விபாகம் மஹா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோவாசம் , சங்கிரகணம், கங்கா பூஜை, விபூதி பிரசாதம் வழங்கல், பிற்பகல் 3.00 மணிக்கு தூபிஸ்தானம், கிராம சாந்தி, பிரவேச பலி, வாஸ்து சாந்தி வாஸ்து பிரமாணம், குண்டமண்டல வேதிகாஸ்தாபனம். மாலை 6.00 மணிக்கு ஆச்சார்ய வரணம், ஆச்சார்ய அலங்காரம், சதுர்வேத கோஷம், விநாயகர் வழிபாடு வேதோக்த்த புண்ணியாக ஜபம், மிருத்சங்கிரகணம், அங்குராற்பணம், ஆவாகணம், மூர்த்தி கும்பஸ்தாபனம், கும்பஜ்தாபனம் யாகசாலா பிரவேசனம். ஸ்தோத்திர பாராயணம், விபூதி பிரசாதம் வழங்கல்
பங்குனித் திங்கள் 5ம் நாள் (18.03.2016) வெள்ளிக்கிழமை
காலை 7.00 மணிக்கு புண்ணியாக வாசனம், விம்பஸ்தாபனம், அஷ்டபந்தனம், சிற்பி உபசாரம் தொடர்ந்து யாக பூஷணம், மாலை 5.00 மணிக்கு சதுர்வேத பாராயணம், யாக பூஜை, பூத சுத்தி, நவாக்னி பூஜை, பூர்ணாகுதி, உபன்னியாசம், பேரஜலனம், விபூதி பிரசாதம் வழங்கல்
பங்குனித் திங்கள் 6ம் நாள் (19.03.2016) சனிக்கிழமை
காலை 10.00 மணிமுதல் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் (21.03.2016)திங்கட்கிழமை வரை நடைபெறும்.காலை7.00 மணிக்கு வேத பாராயணம், தருண கணபதி வழிபாடு, பஞ்சலிங்கபூஜை விசேட சந்தி, யாக பூஜை, நவாக்னிபூஜை, பாவன அபிஷேகம், பூர்ணாகுதி, மாலை 4.00 மணிக்கு பிரம்ம கணபதி வழிபாடு, யாக பூஜை தீபாராதனை பிரதக்ஷணம், ஸ்தோத்திர திருமுறை பாராயணம், வருண கும்ப பூஜை, விபூதி பிரசாதம் வழங்கல்,குருமார் உபசாரம். நடைபெறும்.
பங்குனித் திங்கள் 7ம் நாள் (20.03.2016) ஞாயிற்றுக்கிழமை
காலை 7.00மணிக்கு பாவன அபிஷேகம், கந்த சஷ்டி ஜெபம், சதுர்வேத பாராயணம், நிருத்த கணபதி வழிபாடு, மற்றும்விசேட பூஜைகள் .காலை 10.00 மணிமுதல் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் நடைபெறும். மாலை 4.00 மணிக்கு வருண கும்ப பூஜை, யாக பூஜை வேத பாராயணம், தருண கணபதி வழிபாடு, புண்ணியாக வாசனம், கீர்த்தனா படனம், வேதஸ்தோத்திர பாராயணம், விபூதி பிரசாதம் , நடைபெறும்.
பங்குனித் திங்கள் 8ம் நாள் (21.03.2016) திங்கட்கிழமை
காலை 7.00 மணிக்கு சதுர்வேத பாராயணம், மஹா கணபதி வழிபாடு, விஷேட சந்தி, துஜ பூஜை, யாக பூஜை, பாவன அபிஷேகம், பூர்ணாகுதி திருமுறை பாராயணம், விபூதி பிரசாதம் வழங்கல். காலை 10.00 மணிமுதல் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் நடைபெறும்.மாலை 4.00 மணிக்கு சிம்ம, கணபதி வழிபாடு, தீபாராதனை மகமந்திர பூஜை நவாக்னி பூஜை சுகண்ட நாம ஹோமம், வேதஸ்தோத்திர பாராயணம், உபன்னியாசம், விபூதி பிரசாதம் வழங்கல். நடைபெறும்.
பங்குனித் திங்கள் 9ம் நாள் (22.03.2016) செவ்வாய்க்கிழமை
காலை 7.00மணிக்கு மஹா கணபதி வழிபாடு, சதுர்வேத பாராயணம், லலிதா சகஸ்ர நாம பாஸியம், நாதாஞ்சலி விஷேட திரவிய ஹோமம் திருமுறை பாராயணம் மாலை 4.00 மணிக்கு பஞ்ச கௌவிய பூஜை, மஹா கணபதி வழிபாடு, பஞ்ச கௌவிய பஞ்சாமிர்த பூஜை, கர்ப்பத்துவார பூஜை, தத்வ, வர்ண, மந்திர, கலா, பத, நியாசங்கள், பரிவார யாக ஹோமங்கள், ஸ்பர்ஷாகுதி, பிரதான யாக நவாக்கினி பூஜை, ஹோமம், மூர்த்தி சம் ஜோயனம், பரிவார யாகஹோமங்கள், குருமார் உபசாரம்.
பங்குனித் திங்கள் 10ம் நாள் (23.03.2016) புதன்கிழமை
அதிகாலை 5.30மணியளவில் வேத பாராயணம், விநாயகர் வழிபாடு, புண்ணியாக வாசன விஷேட சந்தி, யாக பூஜை, நவாக்னி பூஜை, விஷேட ஹோமம், மஹா பூர்ணாகுதி, அக்னி உத்பவனம், தீபாராதனை, வேத தோத்திர, நிருத்திய கீத, வாத்திய, சர்லாஞ்சலி சமர்ப்பணம், திருமூறை பாராயணம், அந்தர் பலி, பகிர் பலி, கும்ப உத்தாபனம், ராஜகோபுர தூபிகற், அபிஷேகம் தொடர்ந்து 9.17 மணிமுதல் 10.45 மணிவரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் ஸ்ரீ கதிர்வேலாயுத பெருமானுக்கு குடமுழுக்கு விஞ்ஞாபனம் நடைபெறும். தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடைபெறும்.
கிரியைகள் யாவும் இணுவையூர் தர்ம சாஸ்தா குருகுல அதிபர், ‘வேதாகம ஞான பாஸ்கரன்’ சிவஸ்ரீ மகாதேவ சிவாச்சாரியார் அவர்களின் நல்லாசியுடன், மஹா கும்பாபிஷேக பிரதிஷ்டா பிரதம குரு ‘வேதாகம உதய சூரியன்’, வேதாகம சக்கரவர்த்தி, பிரதிஷ்டா கலாசூரி, சிவாகம கலாநிதி சிவஸ்ரீ ஆதி. சௌந்தரராஜ குருக்கள் (தர்மசாஸ்தா குருகுலம் இணுவையூர், யாழ்நகர்) ஆவர்களின் தலைமையின் கீழ் கும்பாபிஷேக கிரியைகள் யாவும் நடைபெறும். ஆலய பிரதம குரு சுpவாகம கலாசிதி சிவஸ்ரீ நாராயண சபாரத்தினக் குருக்கள் (கீரிமலை நகுலேஸ்வர ஆதீனம்) ஆகியோரின் தலைமையயில் நடைபெறும்.