மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு விரைவில் அகற்றப்படும் – ராஜித சேனாரட்ன.

258
மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு விரைவில் அகற்றப்படும் - ராஜித சேனாரட்ன:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இராணுவ பாதுகாப்பு விரைவில் அகற்றப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மே மாதம் 1ம் திகதியின் பின்னர் மஹிந்தவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அகற்றப்படும் என ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன இறுதியாக நடைபெற்ற அமைச்சரவையில் கூறியதாக ராஜித  குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்குவதனை நிறுத்திக் கொள்ள பாதுகாப்புப் பேரவை தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்திற்கு அமையவே மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் வழங்கப்படாத பாதுகாப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டியதில்லை என ஜனாதிபதி கருதுவதாகத் தெரிவித்துள்ளார்.

மஹிந்தவின் பாதுகாப்பு குறித்து ஏற்கனவே பாதுகாப்புப் பேரவை தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE