மஹிந்தவின் இளைய மகன் களத்தில்

288

யார் எவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தினாலும் தர்மமே இறுதியில் வெல்லும் என்றும் தமது சகோதரன் நிரபராதியென விடுவிக்கப்படுவார் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி குற்றத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது சகோதரனான யோஷித ராஜபக்ஷவை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களிடம் ரோஹித இதனைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

‘எனது அண்ணாவை பார்க்க வந்தேன். நாம் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தோம். எனினும், அவரை பார்த்த பின்னர் சிறிது மகிழ்ச்சியாக உள்ளது.

நாம் நீதிக்கு தலைவணங்குகிறோம். அனைவருக்கும் சமமமான முறையில் நீதியை நிலைநாட்டுகின்ற சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் எம்மால் பிழை கூற முடியாது. ஆனால் எவ்வித காரணங்களும் இன்றி எனது சகோதரன் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் நாம் கவலையடைகிறோம்.

அதற்காக நாம் யாரையும் திட்டவோ, விரல் நீட்டவோ மாட்டோம். காரணம் தர்மமே இறுதியில் வெல்லும். அந்தவகையில் எவ்வித அரசியல் அழுத்தங்களும் இன்றி இது குறித்து விசாரித்து தீர்ப்பு வழங்கப்படும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அப்போது அவர் நிரபராதியென விடுவிக்கப்பட்டு வெளியே வருவார்’ என நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.rohitha

SHARE