
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஸவின் தொலைபேசி அழைப்புக்களை வேண்டுமென்றே எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா நிராகரித்து வந்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நிமால் சிறிபால டி சில்வா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மஹிந்த மூன்றாம் தவணைக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தால் நிமால் சிறிபால டி சில்வாவிற்கு பிரதமர் பதவி வழங்குவதாக இணங்ககப்பட்டிருந்தது.
எனினும் தற்போது மஹிந்த ராஜபக்ஸ பல தடவைகள் நிமால் சிறிபால டி சில்வாவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும், முயற்சி பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்தவின் தொலைபேசி அழைப்பிற்கு, எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு உத்தியோகத்தரே பதிலளித்துள்ளார்.
பின்னர் தொடர்பு கொள்வார் என அறிவித்த போதிலும் இதுவரையில் பதிலளிக்கவில்லை எனத் தெரி விக்கப்படுகிறது.
வேண்டுமென்றே எதிர்க்கட்சித் தலைவர் பதிலளிக் காதிருந்தார் என குறிப்பிடப்படுகிறது.
நிமால் சிறிபால டி சில்வா, பிரதமராகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு ஆண்டுகள் தொடரவுள்ள தேசிய அரசாங்கத்தின் பின்னர், சுதந்திரக் கட்சியின் பிரதமராக ஆட்சியில் அமர நிமால் சிறிபால டி சில்வா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்தன போன்றவர்கள் மீளவும் மஹிந்தவை பாராளுமன்றில் அமர்த்தி பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இதனை நிமால் சிறிபால டி சில்வா விரும்பவில்லை எனவும் கொழும்பு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.