முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பினரின் பாதயாத்திரையில் பங்கேற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு, கட்சியின் ஒழுக்காற்று குழுவுக்கு பரிந்துரை அதிகாரத்தை வழங்கியுள்ளது
இந்த குழு தமது பரிந்துரையை மேற்கொண்ட பின்னர் அது தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பில் இடம்பெற்றது. இதன் போது நாட்டின் பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டுள்ளன.
அத்துடன் உள்ளுராட்சி தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்ட வேட்பாளர் விண்ணப்பபடிவங்களை அண்மையில் கிழித்தெறிந்த கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைகளை ரத்துச்செய்யவும் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.