மஹிந்தவின் நெருங்கிய சகா ஒருவர் அப்ரூவராக மாற இணக்கம்?

313
மஹிந்தவின் நெருங்கிய சகா ஒருவர் அப்ரூவராக மாற இணக்கம்?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் நெருங்கிய சகா ஒருவர் அப்ரூவராக மாற இணக்கம் வெளியிட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மிக இரகசியமான கொடுக்கல் வாங்கல்களுக்கு பொறுப்பாகவிருந்த முன்னாள் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரே, அரச தரப்பு சாட்சியாளராக மாற இணங்கியுள்ளார்.காவல்துறைத் தலைமையக இரகசியத் தகவல்களின் ஊடாக இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஸக்களினால் மேற்கொள்ளப்பட்ட பாரியளவு மோசடிகள், ஊழல்கள் தொடர்பில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர், தகவல்களை வழங்கியுள்ளார்.
எதிர்காலத்தில் லலித் வீரதுங்க, காமினி செனரத், பீ.பி.ஜயசுந்தர உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ராஜபக்ஸக்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணியவர்களிடம் எதிர்வரும் நாட்களில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE