மஹிந்தவின் பாதுகாவலர்கள் ஊடகங்களுக்கு கதவடைப்பு

238
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  மஹிந்த ராஜபக்ச காலியில் இன்று கலந்து கொண்ட நிகழ்வொன்றில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.

காலியில் உள்ள ரத்கம பிரதேச சிங்கள ஊடகவியலாளர் ஒருவரின் பேத்தியின் திருமண வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச இன்று கலந்து கொண்டிருந்தார்.

இதனை முன்னிட்டு ரத்கம வந்த அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹான் சில்வா, மாகாண சபை உறுப்பினர் சம்மு ஆரியவன்ச ஆகியோர் ரத்கம கடலோர தங்குவிடுதியொன்றில் கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டனர்.

எனினும் குறித்த இடத்தில் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

தங்குவிடுதி வளாகத்தின் வாயில் கதவை இழுத்து மூடிய மஹிந்தவின் பாதுகாவலர்கள் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை.

கலந்துரையாடலின் பின்னர் வெளியேறிச் செல்லும் போதும் மஹிந்த ஊடகங்களிடம் எதுவித கருத்தும் வெளியிடாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹான் சில்வா, குறித்த தங்குவிடுதி கலந்துரையாடலில் அரசியல் விடயங்கள் எதுவும் கலந்துரையாடப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் என்பது அரசின் ஏமாற்று திட்டம் –  மகிந்த ராஜபக்ச

ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்குவது என்ற அரசாங்கத்தின் திட்டம் ஒரு ஏமாற்று நடவடிக்கை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது ஊடகவியலாளர்களை தவறாக வழிநடத்திச் செல்ல செயற்படுத்தப்படும் ஒரு போலியான வேலைத்திட்டம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரத்கம பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பெறுமதி சேர் வரி 15 வீதமாக அதிகரிக்கப்பட உள்ளதால், எதிர்காலத்தில் மின் கட்டணம் மாத்திரமின்றி நீர் கட்டணமும் அதிகரிக்கும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்  மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

SHARE