மஹிந்தவின் மைத்துனர் நடேசனிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை

235
மஹிந்தவின் மைத்துனர் நடேசனிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மைத்துனர்களில் ஒருவரான திருக்குமாரன் நடேசனிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் ஐந்து மணித்தியால விசாரணை நடத்தியுள்ளனர். நேற்றைய தினம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடேசன், பாராளுமன்ற உறுப்பினர் நிரூபமா ராஜபக்ஸவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பிலேயே நடேசனிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டில் மல்வான பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியொன்று கொள்வனவு செய்யப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தக் காணியை பெசில் ராஜபக்ஸ, நடேசனின் பெயரில் கொள்வனவு செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
64 மில்லியன் ரூபாவிற்கு இந்தக் காணியை கொள்வனவு செய்து 125 மில்லியன் ரூபா பெறுமதியான பாரிய வீடு ஒன்று இந்தக் காணியில் நிர்மானிக்க்பபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் குறித்தே விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE