மஹிந்தவின் மைத்துனர் பிணையில் சென்றார்

209

நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட திருக்குமார் நடேசனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

நடேசன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மைத்துனரும் முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபக்சவின் கணவருமாவார்.

இவருக்கு 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணை ஆகியனவற்றின் அடிப்படையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பூகொட நீதவான் டி.ஏ.ருவான் பத்திரண இந்த பிணையை வழங்கியுள்ளார்.

மல்வானை பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியொன்று ஆறு கோடி நாற்பது இலட்சம் ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதனை கொள்வனவு செய்ய நடேசனுக்கு பணம் எவ்வாறு கிடைத்தது என்பது பற்றிய தகவல்களை வழங்கவில்லை.

சேனாதீர அப்புஹாமிகே “சேனாதீர” என்னும் ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் மூன்று பிள்ளைகளிடமிருந்து இந்தக் காணி கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

நடேசனுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

625-117-560-350-160-300-053-800-210-160-90-1

SHARE