தற்போது திருடர்களை பிடிப்பதில்லை என கூறியதற்கு கடந்த காலங்களில் கடத்தல், காணாமல் போக செய்தல் மற்றும் வெள்ளை வேன் கலாசாரம் போன்றவை இருந்தன என அவர் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த காலக்கட்டங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லையா? என ஊடகவிலாயர் ஒருவர் வினவியதற்கு,
ஊடகவிலாளர்கள் கடத்தப்பட்டமைக்கு தான் கடுமையாக எதிர்ப்பு வெளியிட்டதாகவும், அது மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி மாத்திரம் அல்ல. அவ்வாறான கடத்தல்கள் ஜே.ஆர்.பிரேமதாஸவின் ஆட்சியிலும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து கொலைகளும் மஹிந்தவினால் மேற்கொள்ளப்படவில்லை. ராஜபக்ச ஆட்சியில் வெள்ளை வேன் கலாச்சாரம் காணப்பட்டது. எனினும் நல்ல மனிதன் ஒருவரை இந்த நாட்டில் நான் கண்டதில்லை. அத்துடன் நாட்டிற்கு சேவை செய்த ஒருவரும் அந்த வெள்ளை வேனில் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்படவில்லை.
வெள்ளை வேனில் பாதாள உலகத்தினர் கடத்தப்பட்டனர், தீவிரவாதிகள் கடத்தப்பட்டனர், அந்த காலக்கட்டத்தில் இருந்த பிரதான பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்கு தடையாக இருந்தவர்கள் மாத்திரமே கடத்தி செல்லப்பட்டுள்ளனர்.
வெள்ளை வேனில் கடத்தி செல்லப்பட்டவர்கள் மறைக்கப்பட்டார்களா இல்லை என்றால் கொலை செய்யப்பட்டார்களா என்பது எனக்கு தெரியாது. எனினும் கடந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல விடயங்களுக்கு 2015ஆம் ஆண்டும் ஜனவரி மாதம் 08ஆம் திகதி விடை கிடைத்தது.
எனினும் இதன் மூலமாக எதிர்பார்த்தவைகளுக்கு நல்லாட்சியினுள் மக்களுக்கு கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து கொலைகளும் மஹிந்த ராஜபக்சவினால் மேற்கொள்ளப்படவில்லை என் நிரோஷன் கூறியதன் ஊடாக, அதன் அர்த்தம் மஹிந்த ராஜபக்சவினால் சில கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்.
வெள்ளை வேனில் பாதாள உலகத்தினர் கடத்தப்பட்டனர், தீவிரவாதிகள் கடத்தப்பட்டனர், அந்த காலக்கட்டத்தில் இருந்த பிரதான பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்கு தடையாக இருந்தவர்கள் மாத்திரமே கடத்தி செல்லப்பட்டுள்ளனர் என அவர் கூறினார், யார் கடத்தப்பட்டாலும் அவருக்கு கிடைக்க வேண்டிய தண்டனை சட்டத்திற்கமைய கிடைக்க வேண்டும் என்பது உலகம் ஏற்றுகொண்ட சத்தியமாகும் என்பதனை நிரோஷன் மறந்து விட்டார் என அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு கூறப்பட்டதில் முக்கிய காரணமாக இருந்தது அந்த காலக்கட்டத்தில் இருந்த பிரதான பிரச்சினைகளை தீர்த்து கொள்வதற்கு தடையாக இருந்தவர்கள் மாத்திரமே கடத்தி செல்லப்பட்டுள்ளனர் என அவர் கூறியிருந்தார்.
கடந்த அரசாங்கத்திற்கு தடையாக இருந்தவர்கள் கடத்தப்பட்டார்கள் எனப்படுவது பல வருடங்களாக ஊடகவியலாளர்களாக செயற்பட்டவர்களாகும்.
நிரோஷன் கூறியதற்கமைய வெள்ளை வேனில் நல்ல மனிதர்கள் கடத்தி சென்று கொலை செய்யப்பட்டுள்ளமை அல்லது அச்சுறுத்திப்படவில்லை என குறிப்பிட்டார்.
அப்படி என்றால் ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட, லலித் குகன் ஆகியவர்கள் நல்ல மனிதர்கள் இல்லையா என கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.