மஹிந்தவின் 70வது பிறந்த நாளுக்கு மைத்திரிக்கு அழைப்பு

318
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் 70வது பிறந்த தின மத வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது

எதிர்வரும் 18ம் திகதி மஹிந்த ராஜபக்ச தனது 70ம் பிறந்த நாளை கொண்டாடவுள்ளார்.

பிறந்த நாளை முன்னிட்டு அனுராதபரத்தில் விசேட மத வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

இந்த வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கேற்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளது.

எழுத்து மூலம் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்படும் என மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் ருவான்வெலிசேயாவில் 84,000 விளக்குகள் ஏற்றி விசேட பூஜை ஒன்றை நடத்தியும், ஸ்ரீமஹா போதியில் விசேட போதி பூஜையொன்றும் அன்றைய தினம் நடைபெறவுள்ளது.

SHARE