
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இந்த அரசாங்கம் உரிய பாதுகாப்பை வழங்காவிட்டால், மக்கள் பாதுகாப்பை வழங்குவார்கள் என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாரஹென்பிட்டி அபாயராமயவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தம் கூறுகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.
மஹிந்த ராஜபக்சää நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்த தலைவராவார். இவ்வாறான ஓர் தலைவருக்கு எதிராக அரசாங்கம் தூரநோக்கமின்றி தீர்மானங்களை எடுக்குமாயின், பொதுமக்கள் அதனை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.