முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கான வரப்பிரசாதங்கள் மற்றும் உரிமைகளுடன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதனால், ஏனைய வேட்பாளர்களின் உரிமை மறுக்கப்படுகிறது என ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் இது குறித்து ஜே.வி.பி முறைப்பாடு செய்யவுள்ளது.
1986ம் ஆண்டு 4ம் இலக்க ஜனாதிபதி உரிமைச் சட்டத்திற்கு அப்பால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கு வரப்பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன.
இதனால் ஏனைய வேட்பாளர்களுக்கு கடும் அநீதி இழைக்கப்படுவதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியுள்ளது.
சட்டத்தரணி சுனில் வட்டகல மற்றும் ஜே.வி.பி.யின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் ஆகியோர் இன்று இந்த முறைப்பாட்டை செய்யவுள்ளனர்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் வரப்பிரசாதங்களை ரத்துச் செய்ய தம்மால் முடியாது என தேர்தல் ஆணையாளர் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.