
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு குண்டு துளைக்காத வாகனத்தை பழுதுபார்த்து விரைவில் வழங்குமாறு, மேல் மாகாண முன்னாள் அமைச்சர் ஜகத் குமார பஸ்நாயக்க கோரியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகங்களில் ஊடாக அவர் இதனைக் கோரியுள்ளார்.
அவர் மேலும் கோரிகையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குண்டு துளைக்காத ஜீப் வண்டி நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இதனைத் திருத்திக் கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். எனினும், இதுவரையில் குறித்த ஜீப் வண்டி பழுதுபார்க்கப்படவில்லை.
அரசியல் பேதங்கள் பாராது உண்மையான உணர்வுடன் ஜீப் வண்டியை பழுதுபார்க்க ஜனாதிபதியின் செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜகத் குமார பஸ்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.