இலங்கையின் நீதித்துறை தொடர்பில் பேச நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்சவுக்கும், நாமல் பேபிக்கும் அருகதை இல்லை என்று வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள அனைவருக்கும் நாமல் பேபி எவ்வாறு சட்டப்பரீட்சையில் சித்திப்பெற்றார் என்பதும் தெரியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இருவருக்கும் இலங்கையின் நீதித்துறை பற்றி பேச அருகதையில்லை என்று அவர் நேற்று கொழும்பில் வைத்து தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவே நீதித்துறையில் நீதிபதிகளையும் அதிகாரிகளையும் நியமித்தார். இதன்போது அவர் நாட்டை கவனத்தில் கொள்ளாது தமது குடும்பத்தை மாத்திரமே கவனத்தில் கொண்டு செயற்பட்டார்.
முன்னாள் பிரதம நீதியரசரை எவ்வித காரணமும் இன்றி பதவியில் இருந்து நீக்கினார்.
இந்தநிலையில் நாமல் பேபியும் தந்தையின் வழியையே பின்பற்றியதாக மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.