மஹிந்தவுக்கு பொன்சேகா சபையில் பதிலடி!

233
நாட்டில் ஜனாதிபதி ஒருவரும், பிரதமர் ஒருவரும் பதவியில் இருக்கும் போது சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை கையளிக்கும் சம்பிரதாயம் ஒன்று உலகில் இதுவரை இல்லையென அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
mahi-sarath_CI

கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி நாட்டைத் தன்னிடம் கையளிக்குமாறு கூறியிருந்தார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகிய இருவரும் பதவியில் இருக்கும் போது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு நாட்டைப் பொறுப்புக் கொடுக்கும் நிகழ்வு உலகில் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறவில்லை.

நாட்டைத் தன்னிடம் பொறுப்புத் தருமாறு கோரும் முன்னாள் ஜனாதிபதி கடந்த 10 வருடத்தில் நாட்டில் நடத்தியிருந்த ஆட்சி சகலருக்கும் தெரியும். அவருடைய ஆட்சியாலேயே நாடு இந்த மோசமான நிலையை எதிர்கொண்டுள்ளது என்றும் கூறினார்.

நாட்டின் பொருளாதாரம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரை தொடர்பில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் பொன்சேகா இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே கொழும்பில் கூட்டம் நடத்தியதாகவும், இக்கூட்டம் வெற்றியளித்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த போதும் அவர்கள் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே செயற்பட்டனர்.

தற்பொழுதும் கூட்டங்களை நடத்தி நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்து எம்மை மீண்டும் சிறைகளுக்கு அனுப்பி, குரோதத்தைத் தீர்க்கும் வகையில் செயற்படலாம் என்ற எண்ணத்திலேயே செயற்பட்டு வருகின்றனர் என்றார்.

SHARE