மஹிந்தவுடனான உறவுகளைத் தொடரும் சீனா

324

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சீனா தொடர்ந்தும் உறவுகளைப் பேணி வருகின்றது.
ராஜதந்திர ரீதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அண்மையில் சீனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு ஸென்மின், சீனாவின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியாக அங்கம் வகித்த வேளையில் சீன அதிகாரிகள் ராஜதந்திரிகள், இவ்வாறான சந்திபுக்களை நடத்தவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது.
எனினும், இதனை நட்பு ரீதியான சந்திப்பு என முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவை ஆட்சி பீடமேற்றுவதில் சீனா தொடர்ந்தும் முனைப்பு காட்டி வருவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

SHARE