முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (திங்கட்கிழமை) சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பானது, இன்று இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்திப்பிற்கான அழைப்பு ஜனாதிபதியிடமிருந்தே கிடைக்கப்பெற்றுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு, கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் இரு பிரதான கட்சிகளும் செயற்பட்டு வருகின்றன. அத்தோடு, அரசாங்கத்திற்கு எதிராக எதிர்வரும் 28ஆம் திகதி, பாரிய பாதயாத்திரை ஒன்றினை நடத்த ஒன்றிணைந்த எதிரணியினர் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.