மஹிந்த கூட்டணிக்குள் தாவ முயற்சிக்கும் மைத்திரியின் சகோதரர்!

525

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

நுவரெலியாவுக்கு சென்ற மஹிந்த ராஜபக்ச கிரகரி ஏரிக்கு அருகில் உள்ள கால்டன் ஹோட்டலில் தங்குவதற்கு அறைகளை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது மஹிந்த தங்கியிருந்து ஹோட்டலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன சென்றுள்ளார்.

இதன்போது தங்கள் ஹோட்டலில் தங்க வருமாறு மஹிந்தவுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

எனினும் அவரின் கோரிக்கையை நிராகரித்த மஹிந்த, ஆடம்பரமான ஹோட்டல்களில் தங்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கு அழகாவும் அமைதியாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறிது நேரம் மஹிந்தவுடன் பேசிக் கொண்டிருந்த டட்லி சிறிசேன, மீண்டும் நுவரெலியா வருகை தரும் சந்தர்ப்பத்தில் தங்களின் ஹோட்டலுக்கு வருமாறு, அழைப்பு விட்டதுடன் அங்கிருந்து சென்றதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சமகால அரசாங்கத்திற்கு எதிராக மாற்று சக்தி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் மஹிந்த தரப்பினர் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-6 625-0-560-320-160-600-053-800-668-160-90-7 625-0-560-320-160-600-053-800-668-160-90-8 625-0-560-320-160-600-053-800-668-160-90-9 625-0-560-320-160-600-053-800-668-160-90-10

 

 

 

 

SHARE