மஹிந்த தரப்பின் 10 பேர் பல்ரி

311

gents-salon

மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவான தரப்பைச் சேர்ந்த பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அவைத் தலைவர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட ஒரு தொகுதியினர் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ள அதேவேளை, ஒரு தொகுதியினர் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கின்றனர்.

இவ்வாறு கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகித்து வரும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள முடியும் எனவும் அதற்கான அழைப்பினை தாம் விடுப்பதாகவும் லக்ஸ்மன் கிரியல்ல பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரச கணக்குகள் குறித்த பாராளுமன்ற செயற்குழுவின் தலைமைப் பதவிக்கு பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எனினும், இந்த பதவியை தாம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என பந்துல குணவர்தன பதவியை நிராகரித்துள்ளார்.

SHARE