மஹிந்த தரப்பு மீண்டும் சதியில்.

249

 பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் தொடாபிலான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்வது குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தரப்பு கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் சட்டத்தரணிகள் இது குறித்த ஆராய்ந்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆணைக்குழுவில் நான்கு உயர் நீதிமன்ற நீதவான்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இது சட்டவிரோதமானது எனவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்யத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் அரசியல் சாசனத்திற்கு அமைவாக உயர் நீதிமன்ற நீதவான்கள் வேறும் கடமைகளில் ஈடுபடுத்த எவ்வித தடையும் வரையறைகளும் கிடையாது என நீதவான் ப்ரீதி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.MR Law 01

SHARE