முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பலசூரிய மற்றும் முன்னாள் பொருளாதாரஅமைச்சர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் ஜனாதிபதி விசாரண ஆணைக்குழுவில்முன்னிலையாகியுள்ளனர்.
இவர்கள் இருவரிடமும் தற்போது வாக்குமூலம் வழங்கப்பட்டு வருவதாகஆணைக்குழுவின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த ஆட்சி காலத்தில் ஆயுத பாதுகாப்பு உரிமை இல்லாத போதிலும் தேசிய சுதந்திரமுன்னணி கட்சியில் உள்ள நால்வருக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸ் பாதுகாப்புவழங்கியமை தொடர்பிலேயே வாக்குமூலம் அளிப்பதற்காக மஹிந்த பலசூரிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்த மாதம் 10 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில்முன்னிலையாகுமாறு மஹிந்த பலசூரியவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமைகுறிப்பிடத்தக்கது.