மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டிய தேவையும் கிடையாது.

237

thumintha

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டிய எவ்வித தேவையும் கிடையாது.

அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த சில்வா சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கட்சியின் ஒழுக்க விதிகளை தொடர்ச்சியாக மீறி பாத யாத்திரை நடத்தி கட்சியின் தலைமையகம் மீது கல் வீசி, ஜனாதிபதியை தொடர்ச்சியாக இழிவுப்படுத்தி தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கிடையாது என்பதனை மஹிந்த உள்ளிட்ட தரப்பினர் நாட்டுக்கு மக்களுக்க நிரூபித்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்தக் குழுவிற்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கட்சியின் மத்திய செயற்குழுவிடம் அனுமதி கோருதல் மற்றும் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தல் ஆகிய இரண்டு நடவடிக்கைகளே எஞ்சியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE