மஹிந்த ராஜபக்ச என்பது கலாவதியாகிய, பூஞ்சனம் பிடித்த ஒர் பண்டம்!- கிரியல்ல

324
மஹிந்த ராஜபக்ச என்ற பண்டம் காலாவதியாகியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

அன்று நாம் ஈட்டிய வெற்றியை காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்காக நாளுக்கு நாள் எம் பக்கள் மக்கள் ஆதரவு திரளுகின்றது.

மஹிந்த ராஜபக்சவிற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதியளிக்கப்பட்டமையானது நாட்டை பின்நோக்கி நகர்த்தும் முயற்சியின் ஆரம்பமாகும்.

கடந்த பத்து ஆண்டுகளில் செய்ய முடியாதவற்றையே மஹிந்த இனி செய்யப் போகின்றார்.

நான் சொல்கின்றேன் மஹிந்த ராஜபக்ச என்பது கலாவதியாகிய, பூஞ்சனம் பிடித்த ஒர் பண்டமாகும்.

எமது தலைவரைச் சுற்றி சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சக்திகள் இணைந்து கொண்டுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் காரணமாகவே ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோற்கடிக்கப்பட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபாலவிற்கு கிடைத்த வாக்குகளில் 90 வீதமானவை ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்தவையாகும்.

எமது தலைவர் மிகப் பெரிய தியாகம் ஒன்றை செய்துள்ளார், எனினும் இந்த தியாகம் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என லக்ஸ்மன் கிரியல்ல ஹசலக பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சிக் கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.

SHARE