விசேடமாக இத்தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் முன்னணி தலைவர்களிடம் கலந்துரையாடல் மேற்கொள்ளாது, மஹிந்த ராஜபக்ச மற்றும் கோத்தபாய ராஜபக்ச தங்கள் தனிப்பட்ட விருப்பத்திற்கமைய செயற்பட்டுள்ளதாகவும், மஹிந்த ராஜபக்சவினால் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்ட இவ்வாறான செயற்பாடுகளினால் முன்னணியில் அவரை ஓரங்கட்டவுள்ளதாக முன்னணி சிரேஷ்ட தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுவரையில், ராஜபக்சவின் இவ்வாறான தீர்மானத்தினால் முன்னணியில் மஹிந்த தரப்பினர் மிகவும் மன வருத்தத்துடன் இருப்பதானவும், தங்களின் கேள்விகளுக்கு அவரால் ஒரு திட்டவட்டமான பதிலை வழங்க முடியாதுள்ளமையினால் தங்களுக்கு அசௌகரியமாக உள்ளதாக மஹிந்த தரப்பினர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இவ்வாறான ஒரு நிலைமையினால் முன்னணியின் தேர்தல் பிரச்சாரம் நடவடிக்கைகள் பாதிப்பேற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இச்செய்திகள் போலியானவை என கட்சிகாரர்களிடம் கூற முடியும். எனினும் இச்செய்திகள் உண்மை என்பது தெரியவந்து விட்டால் மீண்டும் அவரால் அவர்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலை உருவாகிவிடும் எனவும் அறிவித்துள்ளனர்.
அவரது கட்சிகாரர்கள் இது தொடர்பில் தெளிவான கருத்தினை மக்கள் முன் அறிவிக்க வேண்டும் என அவர்கள் மஹிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.