மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தல் விளம்பரங்கள் தொடர்பில் அவர் பல மில்லியன் ரூபாய்களை சுயாதீன தொலைக்காட்சிக்கு செலுத்தவேண்டும்

319

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்றத்தை அரசாங்கம் சுமத்தாத போதும், அவரின் செல்வாக்குக்கு மக்கள் மத்தியில் சரிவு ஏற்படும் வகையில், நிதி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் முன்வைத்து வருகிறது.

mahinda1

ஏற்கனவே ஜனாதிபதி தேர்தல் விளம்பரங்கள் தொடர்பில் அவர் பல மில்லியன் ரூபாய்களை சுயாதீன தொலைக்காட்சிக்கு செலுத்தவேண்டும் என்ற அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறார்.

இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை போக்குவரத்துசபையின் பஸ்களை பயன்படுத்தி அவற்றுக்கு பணம் செலுத்தாமை தொடர்பான வழக்கு எதிர்வரும் 30ஆம் திகதியன்று விசாரணைக்கு வரவுள்ளது.

141 மில்லியன் ரூபாய்களை மஹிந்த ராஜபக்ச தரப்பு இலங்கை போக்குவரத்து சபைக்கு செலுத்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கில் மஹிந்த ராஜபக்சவுடன், சுசில் பிரேமஜயந்த மற்றும் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

SHARE