கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில், நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் அனைத்து நாட்களிலும் தவறாது நாடாளுமன்றில் பிரசன்னமாகுமாறு மஹிந்த ராஜபக்ச, கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அண்மையில் கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கூறுகையில்,
நாட்டு மக்களின் சார்பில் குரல் கொடுக்கக்கூடிய முக்கியமான இடமாக நாடாளுமன்றம் அமைந்துள்ளது.
கடந்த தமது ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்ற அமர்வுகளில் அதிகம் பங்கேற்காமை, எனக்கு பிழைத்த ஓர் இடமாகும்.
எதிர்காலத்தில் இவ்வாறான பலவீனங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.