ஆட்சி கவுக்கப்பட்ட மஹிந்த அரசு சிங்களவர் மத்தியில் தன்னை ஒரு இனவாத சிங்களப் பேரினவாத வாதிகளாகக் காட்டி வருகின்றன. பல்லாயிரக் காணக்கான மக்களை ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் கொன்று குவித்த மஹிந்த அரசு மீண்டும் ஆட்சிக்கு வருமாக இருந்தால் தமிழ்ப் பிரதேத்தில் மட்டுமல்ல சிங்களப் பிரதேத்திலும் இரத்த ஆறு ஓடும் மறுபடியும் மஹிந்த அரசு ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு வழங்கக் கூடிய அனைத்துச் சலுகைகளும் நிறுத்தப்பட்டு ரணில், மைத்திரி உட்பட பல அரசியல் வாதிகள் பழிவாங்கப்படுவார்கள். அடுத்த சுத்திகரிப்பு வெகுவிரைவாக இடம்பெறும் ஆகவே ரணில் விக்கிரமசிங்கவினுடைய கூட்டு அரசாங்கம் தமிழ் மக்களுக்கான உடனடித் தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். தமிழ் மக்களுக்கான தீர்வினை இவ்வரசாங்கம் பெற்றுக் கொடுக்காவிட்டல் மீண்டும் மஹிந்த ஆட்சி பீடம் ஏறுவார்.