மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை 12.10 மணியளவில் மலேசியா நாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

217

முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை 12.10 மணியளவில் மலேசியா நாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுடன் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் பயணித்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், மலேசியாவில் ஐந்து நாள் தங்கியிருப்பார் எனவும், அங்கு நடைபெறவுள்ள ஆசிய அரசியல் கட்சி சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வார் எனவும், முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கட்சி சம்மேளனத்திற்கான அழைப்பு அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள நிலையில் எவ்விதமான தயக்கங்களும் இன்றி அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என சுதந்திர கட்சியின் பொது செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளதுடன், சம்மேளனத்தில் கலந்துக் கொள்ளாதவர்கள் குறித்து எதிர் காலத்தில் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.mm1m2m3m4

SHARE