பாராளுமன்ற வளாகத்தில் இன்றைய பாராளுமன்ற விவாதத்தின் நிகழ்ச்சி நிரல் குறித்து கலந்துரையாடும் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.
இன்று இடம்பெறவிருக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் பெரும்பாலும் கலந்து கொள்ள மாட்டார்கள் என வாசுதேவ நானயக்கார தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய விடயங்களை முன்மொழிவதா அல்லது ஆளுந்தரப்பை ஏற்பதா போன்ற இரு விடயங்களை அடிப்படையாகக் கொண்டே இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளதாக வாசு தேவ நானயக்கார மேலும் தெரிவித்தார்.
இதற்கிடையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளுந் தரப்பு அமைச்சர்களின் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
இக் கலந்துரையாடலில் இன்று இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் கூட்டம் மற்றும் பாராளுமன்ற அமர்விற்கு ஆளுந்தரப்பு சமூகமளிப்பதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானம் எட்டப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.