
மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தை பழிவாங்குவதனை அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஸ குடும்பத்தினரை பழிவாங்க மேற்கொள்ளும் முற்சி அவ்வளவு சுபமானதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்ற நிலையில் அரசாங்கம் ராஜபக்ஸக்களை பழிவாங்குவதில் கடும் ஆர்வம் காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பெசில் ராஜபக்ஸவை ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டில் கைது செய்ததாகவும் தற்போது வேறும் குற்றச்சாட்டு ஒன்றின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதற்காக எங்களது குடும்பத்திற்கு இவ்வாறு செய்கின்றீர்கள் என நாமல் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பல பிரச்சினைகள் காணப்படும் நிலையில் அரசாங்கம் ராஜபக்ஸக்களை துரத்தி துரத்தி பழிவாங்கி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.