மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் தேசிய தலைவர்களில் ஒருவராகவே கருதப்படுகிறார் – இரா.சம்பந்தன்

309
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஒத்துழைப்பு நாட்டிற்கு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு கோரிக்கையொன்றை விடுக்கவுள்ளதாகவும், ஆனால் அவர் இந்த சபையில் தற்போது இல்லை எனவும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் தேசிய தலைவர்களில் ஒருவராகவே கருதப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர் தற்போது நாட்டிற்கு அனைத்து வகையிலும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் எனவும், அவரின் ஒத்துழைப்பு இந்த நாட்டு மக்களுக்கு தேவையானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ நாட்டின் நலனை கருத்திற் கொண்டு செயற்பட வேண்டும் என இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

அத்துடன், மஹிந்த ராஜபக்ஸ இந்த விடயத்தில் சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

mahinda-sampanthan-sumanthiran

SHARE